இரவின் தனிமையில்
மெல்லிய குளிரில்
மேகக் கூட்டத்தின் நடுவில்
என் நிலா..
குட்டையாய்
தேங்கியிருந்த நீர்
நேற்று பெய்த மழையின்
மிச்சமாய்..
அந்த நிலவின் ஒளியில்
தேங்கியிருந்த நீரில்
உன் முகம்
சற்றே கலங்கலாய்..
என் மனதில்
எழும் சலனத்தைப் போல்..
Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft