skip to main | skip to sidebar
நிலா
RSS

சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்



பகுதி 1

இதோ துவங்கிவிட்டது
என் முதல் தொலைதூரப்பயணம்
என் இனிய தோழிகளுடன்..
முன் இருந்த 
சிறு தயக்கம்
சிறு பயம்
அனைத்தையும் தொலைத்து 
மனதில்
மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே சுமந்து 
தொடங்கியது அந்த இனிய பயணம்
சொர்க்கத்தின் வாசலைத் தேடி..



பகுதி 2

ஆரவாரமாய் வரவேற்றது
தலைநகரம்..
ஆம் எம் பயணத்தின்
முதல் நிறுத்தம்
புது தில்லி..
தலை நகருக்கே உரிய பரபரப்புடன்..

இங்கிருந்து பேருந்தில் 
தொடங்கியது
எங்கள் அடுத்தக்கட்ட பயணம்
மணாலியைத் தேடி..

தங்களின் இருப்பிடம் தேடி விரையும் 
மக்கள் கூட்டத்தின் நடுவில்
மெல்ல நகர்ந்தது எங்கள் பேருந்து..

அரியானா மாகாணத்தின் 
ஏதோ ஒரு மூலையில் 
ஒரு சிறு உணவகத்தில் 
உண்ட இரவு உணவு..
ஒரு பிரியாணியை
நால்வரும் பகிர்ந்துண்டது 
வாழ்வின் மிக இனிமையான 
தருணங்களில் ஒன்று..


பகுதி 3


தூரத்து பனிமலைகள்
மெல்லிய குளிர்
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்
அழகிய மணாலி!!
இங்கிருந்து டாக்சியில்
சொர்க்கத்தின் வாசலை நோக்கி தொடங்கியது
ஒரு இனிமையான பயணம்..

வழியில் கண்ட அற்புதங்கள்
சொல்ல வார்த்தைகள் இல்லை..

வாகனங்களுடன் போட்டி போடும் நதி
நொடிக்கொருமுறை நிறம் மாறும் வானம்
ஊசி இலை மரங்கள்
இவற்றை கண்டு ரசித்தபடி
நாங்கள் போய் சேர்ந்தது
கீய்லாங் எனும் சிறு நகரம்..
அங்கு ஒரு சிறு விடுதியில்
கழிந்தது இரவு..

அதிகாலை துவங்கியது பயணம்
எங்கெங்கு காணினும் பனி மலைகள்
இளஞ்சூரியனின் ஒளியால்
மேலும் அழகூட்டப்பட்டு ..
காற்றால் செதுக்கப்பட்ட துளை
உறைந்த நீர்வீழ்ச்சி
அழகிய நீலத்தில் ஒரு நதி
உயரத்தில் ஒரு பரந்த சமவெளி
அதன் நடுவில் ஒரு உப்புநீர் ஏரி..

இயற்கை வஞ்சனையின்றி அழகை வாரி இறைத்திருந்தது ..
சூடான ரொட்டியுடன் வெண்ணையும் உப்பும் கலந்த ஒரு வகை தேநீர்
அந்த இடத்துக்கு மேலும் அழகு சேர்த்தது..

அழகுடன் 
ஆபத்தும் நிறைந்த சாலை
இராணுவத்தின் சோதனைச் சாவடி
இவற்றை கடந்து
நாங்கள் லேஹ்வை அடைந்த போது மணி 9..

முன்பதிவு செய்திருந்த
விடுதியை அடைந்தபோது
காத்திருந்தது அந்த அதிர்ச்சி..





Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ▼  2012 (5)
      • ▼  August (1)
        • To fall in love with you Was not what I wanted.. ...
      • ►  June (4)
    • ►  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft