skip to main | skip to sidebar
நிலா
RSS

சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 2

Trip to Leh

ஆரவாரமாய் வரவேற்றது
தலைநகரம்..
ஆம் எம் பயணத்தின்
முதல் நிறுத்தம்
புது தில்லி..
தலை நகருக்கே உரிய பரபரப்புடன்..

இங்கிருந்து பேருந்தில் 
தொடங்கியது
எங்கள் அடுத்தக்கட்ட பயணம்
மணாலியைத் தேடி..

தங்களின் இருப்பிடம் தேடி விரையும் 
மக்கள் கூட்டத்தின் நடுவில்
மெல்ல நகர்ந்தது எங்கள் பேருந்து..

அரியானா மாகாணத்தின் 
ஏதோ ஒரு மூலையில் 
ஒரு சிறு உணவகத்தில் 
உண்ட இரவு உணவு..
ஒரு பிரியாணியை
நால்வரும் பகிர்ந்துண்டது 
வாழ்வின் மிக இனிமையான 
தருணங்களில் ஒன்றாய் 
இன்றும் மனதில்..





சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 1


இதோ துவங்கிவிட்டது
என் முதல் தொலைதூரப்பயணம்
என் இனிய தோழிகளுடன்..
முன் இருந்த 
சிறு தயக்கம்
சிறு பயம்
அனைத்தையும் தொலைத்து 
மனதில்
மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே சுமந்து 
தொடங்கியது அந்த இனிய பயணம்
சொர்க்கத்தின் வாசலைத் தேடி..





நட்பு


உன்னை பார்த்த நொடி 
நினைவில்லை.. 
உன்னோடு பேசிய முதல் வார்த்தை 
கூட நினைவில்லை..
பல நூற்றாண்டுகளாய் 
உன் அன்பிலும் அக்கறையிலும் 
திளைத்ததொரு பரவசம் 
என் உள்ளமெங்கும்..

நான் சிரிக்கும் போது சிரித்து  
நான் அழும்போது ஆறுதல் தரும் 
என் தோழியே 
உன்னருகில் 
நட்பின் அருமையை 
முழுதாய் உணர்கிறேன்..

என் கண்ணின் 
கருவிழியாய்..
என் இதயத்தின் 
உயிர்த்துடிப்பாய்..
உன் நட்பு..
என் வாழ்க்கை முழுதும் தொடரும் 
வரம் வேண்டும்..






ஒரு காலத்தில் 
விடியா இரவுகளை சபித்தவள்
இன்று
முடியா பகலை 
சபிக்கிறேன்
நீ தோன்றும் கனவுகளுக்காக..









நடு இரவில் விழிக்கிறேன் 
ஜன்னலில் தோன்றும் நிலா.. 
நிலவில் கறைகளை காணாமல் திகைக்கிறேன் 
அங்கே தெரிவது உன் முகம் அன்றோ 
அதில் ஏது கறைகள்!!





நினைவுகள்


மகிழ்ச்சி தளிர்த்திடச் செய்யும் சில
சிந்தை மயங்க வைக்கும் சில
உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில் ஓங்கியடித்திடும் சில
ஊனை வருத்திடும் சில
ஊழிக் காற்றை கதிகலங்க வைக்கும் சில..
தித்திக்கும் செந்தேனாய் 
கலங்கரை விளக்காய்
தொண்டையிலே சிக்கிய மீன் முள்ளாய்
மனதை வருடும் தென்றலாய் சில..

நினைவுகளால் நிறைந்திருக்கும் வானத்தில்
சிறு பறவையாய் நான்..






இரவின் தனிமையில் 
மெல்லிய குளிரில் 
மேகக் கூட்டத்தின் நடுவில்
என் நிலா.. 

குட்டையாய் 
தேங்கியிருந்த நீர் 
நேற்று பெய்த மழையின்
மிச்சமாய்.. 

அந்த நிலவின் ஒளியில்
தேங்கியிருந்த நீரில்
உன் முகம்
சற்றே கலங்கலாய்..
என் மனதில் 
எழும் சலனத்தைப் போல்..







Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ▼  June (7)
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 2
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 1
        • நட்பு
        • ஒரு காலத்தில் விடியா இரவுகளை சபித்தவள்இன்றுமுடியா ...
        • நடு இரவில் விழிக்கிறேன் ஜன்னலில் தோன்றும் நிலா....
        • நினைவுகள்
        • இரவின் தனிமையில் மெல்லிய குளிரில் மேகக் கூட்டத்தின...
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft