skip to main | skip to sidebar
நிலா
RSS

Kannamma en kadhali


சுட்டும் விழிச்  சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி - கண்ணம்மா
வானக் கருமைகொல்லோ?
பட்டு கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடு - நிசியில்
தெரியும் நக்ஷதிரங்களடீ!


சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்!
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடி!  
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ - கண்ணம்மா
மருவக் காதல்கொண்டேன்.


சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோடீ? 
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்; 
காத்திருப் பேனோடீ? - இது பார்,
கன்னத்து முத்தமொன்று! 

- பாரதியார்





Newer Post Older Post Home

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ►  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ▼  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ▼  April (4)
        • Kannamma en kadhali
        • Excerpt from Kurundhogai
        • Un Ninaivugal
        • Trip to Mekadatu and Chunchi falls
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft