skip to main | skip to sidebar
நிலா
RSS


பனி கொட்டும் மார்கழி இரவில்
நிலவொளியில்
யாருமற்ற தனிமையில்
நீயும் நானும்
வேகமாய் ஓடும் கடிகாரமுட்களை சபித்தபடி..






நாம் முதன்முதலில் சந்தித்தது
இதே போன்றதொரு பௌர்ணமி நாளில் தான் ..
நாம் பிரிந்ததும்
இதே போன்றதொரு பௌர்ணமி நாளில் தான்..
அந்த நிலவை தவிர யாரிடம் பகிர்வேன் உன் நினைவுகளை!






மனசினுள் சுகமாய் உறங்கும்
என் காதலை
எழுப்பத் தயங்கினேன்
எழுந்ததும் வலிக்கொடுத்துவிடுமோ
என்ற அச்சத்தில்..

உனைக் கண்ட அடுத்த நொடி
விழித்து விட்டது..

விழியோரத்தில் நீர் கசிகிறது
உன் நினைவுகளை சுமந்தபடி..
சுகமாய்த் தோன்றிய நினைவுகள் கூட
இன்று ரணமாய்..








இவை உனக்கானவை
என்ற பிரக்ஞை இல்லாமல் படிப்பாய்
என் கவிதைகளை ..
என் நெஞ்சத்தின் காதலை
காற்றிடம் அனுப்புகிறேன்
காற்று உன் வாசல் தெரியாமல் திரும்பி வருகிறது ..
என் நிலவும் என்னைக் கைவிட்டுவிட்டது..

இனி எப்படி சொல்வேன் என் காதலை உன்னிடம்..






புதிதாய்ப் பிறந்த உணர்வு
உன்னைப் பார்த்தக்கணத்தில்.. 
உனக்கும் இருக்குமா 
அதே உணர்வு?
இருந்தால் என்ன செய்வாய் நீ..
இல்லாவிட்டால் என்ன செய்வேன் நான்..

விடை காண முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்
உன்னிடம் தோற்று விடக்கூடாது என பிரார்த்தித்துக்கொண்டு..







இழக்கும் வரை
தெரியாத அருமை
இழந்தபின்னரே புரியும் ..
வானில் தினமும் ஒளிவீசிக்கொண்டிருந்தால்
நிலவிற்கு இங்கே மதிப்பில்லை
நினைக்கும் நேரம் மழை பொழிந்தால்
நீரின் அருமை புரிந்திருக்கப் போவதில்லை ..

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்
சுவாரஸ்யமானது
அதை நாம் உணர்ந்து வாழும் வரை..






வாழ்க்கை மிக அற்புதமானது
ஆனால் சிலரால் மட்டுமே
அதை அர்த்தப்படுத்தவும் முடிகிறது
என் நண்பர்கள் போல.. 





Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ▼  2012 (5)
      • ▼  August (1)
        • To fall in love with you Was not what I wanted.. ...
      • ►  June (4)
    • ►  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft