skip to main | skip to sidebar
நிலா
RSS


இன்று 
கவிதையே தோன்றவில்லை
என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் 
கண் முன் 
உன் முகம்..
உனை விட சிறந்த கவிதை 
இந்த உலகில் 
ஏதேனும் உண்டா என்ன?? 






உன்னுடைய சுகத்தை விட 
உன் வலியில் 
என் காதலை 
முழுதாய் உணர்கிறேன்.. 
உன்னுடன் சேர துடிக்கும்
ஒவ்வொரு நொடியும் ஒரு ரணமாய்.. 
உன் ஒரு வார்த்தைக்கு 
இன்னும் எத்தனை நாள் தவமிருப்பது??






சிறு பட்டாம்பூச்சியாய் 
பறந்த என் மனதை
என்ன செய்தாய்
உன் 
காலைச் சுற்றும் நாய்க் குட்டியாய் 
மாறுவதற்கு??








மெல்லிய குளிர் காற்றில்
விண்மீன்களின் கூட்டத்தின் கீழ்
நிலவை ரசித்தபடியே
இரவை கழிக்கும்
வரம் வேண்டும்
பட்டுக்கருநீல புடவை
பதித்த நல் வைரம்
என்று ரசித்த

பாரதியின் கண்களுடன்..






என்னுடன் கண்ணாமூச்சி விளையாட
அப்படி என்ன விருப்பமோ..
வருவாய் என்று நம்பி இருந்தேன்..
அன்று போல் இன்றும்
எங்கே ஓடி ஒளிந்தாய்
என் அருமை மழைத்துளியே??






மழைத்துளி
நிலவொளி
இரவின் தனிமை
நதியின் ஓசை
குயிலின் கீதம்
மலைச்சாரல்
தோழியின் தோள்கள்
கண்ணீரில் நனையும் தலையணை
இவை அனைத்தும் தரும் சுகத்தை
உன் காதலால் கூட தர முடியாது






என் வலிகளை சுகங்களாகவும்
என் துன்பத்தை இன்பமாக்கவும்
என் கண்ணீரை புன்னகையாக்கவும் 
என் முட்களை பூக்களாக்கவும்
உன்னால் மட்டுமே முடியும் 








காதலிடம்
என் முகவரியை தந்து விட்டு
உன் முகவரியை
மறைப்பதேன்..
மறைப்பதும்
மறப்பதும்
கை வந்த கலையோ??







உன்னாலே எனக்குள்
உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா..
எங்கேயோ இருந்து
நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழச் சொல்லுதடா..

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் முடியும்





Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ▼  April (9)
        • இன்று கவிதையே தோன்றவில்லைஎன்று நினைத்து கொண்டிருந்...
        • உன்னுடைய சுகத்தை விட உன் வலியில் என் காதலை முழுதாய...
        • சிறு பட்டாம்பூச்சியாய் பறந்த என் மனதைஎன்ன செய்தாய்...
        • மெல்லிய குளிர் காற்றில் விண்மீன்களின் கூட்டத்...
        • என்னுடன் கண்ணாமூச்சி விளையாட அப்படி என்ன விருப்...
        • மழைத்துளி நிலவொளி இரவின் தனிமை நதியின் ஓசை குய...
        • என் வலிகளை சுகங்களாகவும்என் துன்பத்தை இன்பமாக்கவும...
        • காதலிடம் என் முகவரியை தந்து விட்டு உன் முகவரிய...
        • உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி ச...
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft